மீண்டும் தொடங்கியது இது நம்ம ஆளு படப்பிடிப்பு!

idhu namma aaluசிம்பு – நயன்தாரா இருவரும் காதல் தோல்விக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. இந்தப் படத்தை பசங்க பட இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.

சிம்புவின் தந்தை தயாரிக்க அவரின் தம்பி குறளரசன் இசையமைக்கிறார். படத்தின் 50 சதவீதத்திற்கு மேல் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இது நம்ம ஆளு படம் படத்தைப் பற்றிய வதந்தி அதிகமாக பரவியிருந்தது. இயக்குனர் பாண்டிராஜுக்கும், சிம்புக்கும் பிரச்னை என்றும், அதனால படமே ‘டிராப்’ ஆகி விட்டதென்றும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் ’இது நம்ம ஆளு’ படப்பிடிப்பு நேற்று முதல் மீண்டும் ஆரம்பித்துள்ளது. சிம்புவும், நயன்தாராவும் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டதால் வேக வேகமாக படத்தை எடுத்து முடித்து வெளியிடப் போகிறார்களாம். சில பிரச்னையால் தான் இந்த தாமதம் இனி என் கவனம் எல்லாம் இது நம்ம ஆளு படத்தின் மேல் தான் என்று தெரிவித்து இருக்கிறார் சிம்பு.

‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்பு தனது பழைய காதலியான நயன்தாராவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்திருப்பதால் இந்த படத்தின் மீது மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top