திருமணத்திற்கு பின் நடிப்பிற்கு முழுக்கா : நஸ்ரியா பதில்.

unnamed (15)இயக்குனர் பாசில் மகன் பஹத்தை,நஸ்ரியா திருமணம் செய்ய உள்ளார்.இவர்களது திருமணம் ஆகஸ்ட்  மாதம் கேரளாவில் நடைபெறுகிறது.

திருமணத்தைப் பற்றி அவர் கூறுகையில்,தற்போது எல் பார் லவ் எனும் மலையாளப் படத்தில் நடித்து வருகிறேன்.இதில் என் நிஜ வாழ்க்கை கதாநாயகனுடன் இணைந்து நடிக்கிறேன்.எங்களது திருமணம் காதல் திருமணம் இல்லை,ஆனால் படப்பிடிப்பின் போது ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து வைத்திருந்தோம்.இந்தத் திருமணத்தைப் பற்றி பெற்றோர்கள் கூறியதும் நானும் ஏற்றுக்கொண்டேன் என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்,திருமணத்திற்குப் பிறகு நான் நடிப்பதற்கு பஹத் தடையாக இருக்க மாட்டார்,எனவே திருமணத்திற்குப் பிறகு நடிப்பது பற்றி நான் தான் முடிவு செய்வேன் ஆனால் அதைப் பற்றி இப்போது எந்த முடிவும் செய்யவில்லை என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top