பா.ஜ.க. புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

ராஜ்நாத் சிங் பா.ஜ.க.வின் அடுத்த தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பா.ஜ.க.வில் ஒரே தலைவர் இரண்டு பதவி வகிக்க அனுமதி கிடையாது. இந்நிலையில், தற்போது பா.ஜ.க.வின் தலைவராக உள்ள ராஜ்நாத் சிங், மோடி தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

இந்நிலையில், பா.ஜ.க.வின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, பா.ஜ.க.வின் பொதுச்செயலாளரக உள்ள ஜேபி நட்டா அக்கட்சியின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top