மாநிலங்களவைத் தேர்தலில் டி.கே.ரங்கராஜன் போட்டி: மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் அறிவிப்பு.

T.K.RANGARAJAN (3)மாநிலங்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக டி.கே.ரங்கராஜன் மீண்டும் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுவைச் சேர்ந்த ஏ.ஏ.ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, காங்கிரஸைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், அதிமுகவின் நா.பாலகங்கா, மார்க்சிஸ்ட் கட்சியின் ஆகிய ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. இதையடுத்து அந்த பதவிகளுக்கு நடக்கவிருக்கும் மாநிலங்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வேட்பாளரை அறிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியனர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கேட்டிருந்தனர். அவர்களுக்கு ஆதரவு தருவதாக அதிமுக கூறியுள்ளதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சி தனது வேட்பாளரை அறிவித்துள்ளது.

“எங்களுக்கு ஆதரவு தருவதாக கூறியிருக்கும் அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஃபார்வர்ட் பிளாக் ஆகியோருக்கு நன்றி. சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் சே.கு.தமிழரசன், கொங்கு இளைஞர் பேரவையைச் சேர்ந்த தணியரசு ஆகியோரிடம் ஆதரவு கோருகிறோம்” என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலிலும் இதே கூட்டணி நிலைக்குமா என்று கேட்டதற்கு, “மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஃபார்வர்ட் பிளாக் ஆகிய இடதுசாரி கட்சிகள் அதிமுகவுடன் தொகுதி உடன்பாடு கொள்ள வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் அணுகுமுறை” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top