இந்திய அணிக்கு கூடுதல் பேட்ஸ்மேன்கள் தேவை:- சுனில் கவாஸ்கர் கருத்து.

கவாஸ்கர்இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற, பேட்ஸ்மேன்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தோனி தலைமையிலான இந்திய அணி,இதுவரை நடைபெற்றுள்ள இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியுள்ளது.
இந்நிலையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா ரன்களை வாரி வழங்குவதால், அவரை நீக்கிவிட்டு பேட்ஸ்மேன் ஒருவரை அணியில் சேர்க்கலாம் என ஆலோசனை தெரிவித்தார்.
தொடர்ச்சியாக ஐந்து பேட்ஸ்மேன்கள், ஐந்து பந்துவீச்சாளர்களுடன் விளையாடும் இந்திய அணியின் வியூகம் அன்னிய மண்ணில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர்  நியூசிலாந்துக்கு எதிரான தொடரை தக்க வைக்க வேண்டுமெனில், பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் விகிதத்தை மாற்றியமைப்பது அவசியம் எனவும் கூறினார்.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top