விஜய் படத்தை இயக்கும் சிம்புதேவன்!

விஜய்நடிகர் விஜய்,ஜில்லா படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் வாள் படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குனர் அட்லி அல்லது ஜில்லா படத்தை இயக்கிய நேசன் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் சிம்புதேவன் சொன்ன ஒன்லைன் கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதால் கதையை முழுமையாக தயார் செய்து கொண்டுவரும் படி கூறியுள்ளார்.அதனால் இப்படத்தில் விஜய் நடிப்பது உறுதி ஆகியுள்ளது.ஹீரோயின், மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

பி.டி. செல்வகுமார் மற்றும் தமீன்ஸ் ஃபிலிம் பேனர்  இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை இந்த வருடம் மே அல்லது ஜூன் மாதங்களில் தொடங்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top