ராஜீவ் கொலை குற்றம்சாட்டப்பட்டவர்களின் மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் – ஜவாஹிருல்லா அறிக்கை

ஜவாஹிருல்லாராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளனை விடுதலை செய்யவேண்டும் என்று  மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

வீரப்பன் கூட்டாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்ட பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம், மீசை மாதையன் உள்பட 15 நபர்களுக்கு வழங்கப்பட்ட மரணத் தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது.

மரணத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுவை பரிசீலிக்க குடியரசுத் தலைவர் அல்லது மாநில ஆளுநர் கால தாமதம் செய்தால் மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமின்றி மன நோயாளியாக இருப்பவர்களுக்கும் தனிமை சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கும் மரணத் தண்டனை அளிக்கப்படக் கூடாது என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளாதால் இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும் பாராட்டிற்குரியதாகவும் அமைந்துள்ளது.

என்றவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top