தலிபான் பிரதிநிதிகளை சந்திக்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ!

கத்தாரில் பேச்சு வார்த்தைக்காக தலிபான்கள் பிரதிநிதிகளை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ சந்திக்கிறார். வெள்ளை மாளிகை  செய்தி

இதுகுறித்து வெள்ளை மாளிகை தரப்பி அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ல், “கத்தாரில் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தாலிபன் மற்று ஆப்கானிஸ்தான் அதிகாரிகளை இன்று (சனிக்கிழமை) சந்திக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாதாக சில வாரங்களுக்கு முன்னர், கடந்த பிப்ரவரி மாதம் தலிபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்த்தின்படி அமெரிக்க படைகள் சில திரும்ப பெறப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் அமெரிக்கா படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்ப பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் தலிபான்களை அவ்வப்போது ஆப்கன் அரசு விடுவித்து வருகிறது.

மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார்.

பக்ரீத் திருநாளை முன்னிட்டு மூன்று நாட்கள் அங்கு போர் நிறுத்தத்திற்கு தலிபான்கள் ஒப்புக் கொண்டனர். முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர தலிபான்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதற்கிடையிலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் ஐஎஸ் அமைப்பினர் தாக்குதலை அவ்வப்போது நடத்தி வருகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top