தமிழகத்தில் இன்று 1,663 பேருக்குக் கொரோனா தொற்று; 18 பேர் உயிரிழந்துள்ளனர்

தமிழகத்தில் இன்று 1,663 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 7,68,340. சென்னையில் மட்டும் மொத்தம் 2,11,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

சென்னையில் 486 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 1,177 பேருக்குத் தொற்று உள்ளது.

* தற்போது 67 அரசு ஆய்வகங்கள், 150 தனியார் ஆய்வகங்கள் என 217 ஆய்வகங்கள் உள்ளன.

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 12,916.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,14,70,429.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 69,190.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 7,68,340.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,663.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 486.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 4,64,227 பேர். பெண்கள் 3,04,080 பேர். மூன்றாம் பாலினத்தவர் 33 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 1,010 பேர். பெண்கள் 653 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,133 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 7,43,838 பேர்

* இன்று  வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் ஒருவருக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது

* இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 11 பேர் தனியார் மருத்துவமனையிலும், 7 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 11,586 ஆக உள்ளது. இதுவரை சென்னையில் மொத்தம் 3,808 பேர் உயிரிழந்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top