தேர்தல் ஸ்டண்ட்;ஆன்லைன் ரம்மிக்கு தடை: மீறினால் 6 மாதம் சிறை- அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடைசெய்யும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

ஏற்கனவே தமிழக அரசு அனுப்பிய  ஏழு பேர் விடுதலை குறித்தான மசோதா ஆளுனரால் கையெழுத்து இடாமல் இருக்க தேர்தல் நெருங்கும்  இந்த நேரத்தில் திடீரென  ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடைசெய்யும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளது ‘தேர்தல் ஸ்டண்ட்’ என்று அரசியல் விமர்ச்சகர்கள் கூறுகிறார்கள்

ஆன்லைன் சூதாட்டம் மூலம் இளைஞர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் அவல சூழ்நிலை ஏற்பட்டது. பல இளைஞர்கள் பணத்தை இழப்பதோடு, உயிர்களை மாய்த்துக் கொண்டதால் உடனடியாக தடைசெய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போதெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்தது  தமிழக அரசு. மேலும், கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போதும் அமைதி காத்தது தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த அரசு மீது அதீத ஊழல் குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் இருக்கின்ற இவ் வேளையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து இருப்பது மிகப்பெரிய தேர்தல் உத்தியே என சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்

ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்ததும். உடனடியாக தமிழக ஆளுநர் இந்த சட்டத்திற்கு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது மேலும், பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பாஜக, அதிமுக இரண்டும் சேர்ந்து கூட்டாக ‘தேர்தல் ஸ்டண்ட்’ அடிக்கிறது அதுவும் அமித்ஷா வருகிற இந்த நேரத்தில் மக்களிடம் தனக்கு செல்வாக்கு இருப்பது போல் நல்ல திட்டங்களை கொண்டுவருவதுபோல் ஒரு மாய தோற்றத்தை காண்பிக்க எடப்பாடி அரசு முடிவு செய்திருப்பது தெளிவாக தெரிகிறது

இந்த சட்டத்தில் “தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்படுகிறது. மீறி விளையாடினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 6  மாதம் தண்டனையும் விதிக்கப்படும். ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், 2 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். ஆன்லைன் மூலமாக நடைபெறும் பண பரிவர்த்தனை தடுக்கப்படும். பணம் வைத்து விளையாடுபவர்கள், கணிணி, உபகரணங்கள் தடை செய்ய சட்டத்தில் வழிவகை உள்ளது.” என கூறப்பட்டுள்ளது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top