பாஜக அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்; பஞ்சாப்பில் 30 ரெயில்கள் ரத்து

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு பஞ்சாப்பில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் எதிரொலியாக 30 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் ஆளும் பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  விவசாயிகளை பற்றி கவலை படாத ஒன்றிய பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்து நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத்தை கார்பரேட் கையில் ஒப்படைக்க பார்க்கிறது.அந்த சட்டங்களை எதிர்த்து  பஞ்சாப்பில் விவசாயிகள் ரெயில் மறியல், வேளாண் நிலங்களை தீ வைத்து எரித்தல் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபடுகின்றனர். அப்போதும், ஒன்றிய பாஜக அரசு விவசாயிகளை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறது

ரெயில் மறியல் போராட்டம் எதிரொலியாக பஞ்சாப்பில் ரெயில் போக்குவரத்து முடங்கி உள்ளது. மக்கள் சிறிது பாதிப்படைந்தாலும்  ஒட்டுமொத்த பஞ்சாப் மக்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது .விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், பஞ்சாப்பில் போராட்டத்தினை முன்னிட்டு வடக்கு ரெயில்வே 30 ரெயில்களை ரத்து செய்துள்ளது.  இதேபோன்று 11 ரெயில்கள், குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில் நிற்பதற்கு பதிலாக, அதற்கு முன் வரும் ரெயில் நிலையத்துடன் சேவையை நிறுத்தி கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top