யார் ‘B’ டீம்? மக்கள் வெறுக்கும் காங்கிரஸ்; பீகார் தேர்தல் தமிழகத்திற்கு பாடம்!

பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனது  தோல்விகளை மறைக்க “AIMIM கட்சி ஒவைசியை பாஜகவின் B-team என்று கூறிவருகிறது.இதைதான் அறிவிஜீவிகளும் அப்படியே சொல்லி வருகிறார்கள் .காங்கிரசுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது சரி, ஆனால், அறிவிஜிவிகளுக்கு என்ன ஆனது ?உண்மை என்ன வென்று இவர்கள் உணர்வார்களா?

பீகார் சட்டமன்ற தேர்தல் பல பாடங்களை சொல்லி சென்றிருக்கிறது ஆனால், அரசியல் நோக்கர்கள்,அரசியல் விமர்ச்சர்கள் தங்களது அபிலாசைகளை மட்டுமே அதிலிருந்து எடுத்துக்கொண்டு விமர்ச்சனம் செய்கிறார்கள். அதில் பிரதான விமர்ச்சனம் காங்கிரஸ் கிளப்பி விட்ட “AIMIM கட்சி ஒவைசி பாஜகவின் B-team என்பதுதான்.

தமிழகத்திலும் பாஜக எதிர்நிலை அரசியல் விமர்ச்சகர்கள் “பாஜக அதிக இடங்களை பெற்றதற்கு காரணம் AIMIM கட்சி ஒவைசி தான்” “அவர் தனியாக நின்று இஸ்லாமிய ஓட்டுகளை பிரித்து விட்டார் ஆகையால்தான் மகா கூட்டணி வெற்றி பெறவில்லை” என்று கூறுகிறார்கள், அப்படியே எழுதுகிறார்கள். தமிழகத்தின் முக்கிய அறிவிஜிவிகளும் இப்படிதான் காங்கிரஸ் கூவிய பாட்டை பாடுகிறார்கள்.

இது தாம் கடுமையாக எதிர்க்கும் [பாஜக] அரசியல் கட்சி அதிக இடங்களை பெற்று விட்டது என்கிற ஆதங்க நிலைதான் தவிர  அறிவார்ந்த செயல்பாட்டல்ல! பாஜக தோற்கடிக்க படவேண்டிய கட்சிதான் மாற்று கருத்தில்லை. ஆனால் அதற்கு காங்கிரஸ் என்ன செய்தது என்பதுதான் நமக்கு கேள்வி.அதை அறிவிஜீவிகள் திரும்பி பார்த்தல் பீகாரில் நிகழ்ந்த கூத்து நாளை தமிழகத்தில் நிகழாமல் இருக்கும்.அதை விட்டுவிட்டு ‘AIMIM கட்சி ஒவைசி’யை குறை கூறுவது எந்தநிலையிலும் அணுக்கமானது அல்ல! 

பீகார் தேர்தலில் லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து மகா கூட்டணியை உருவாக்கியிருந்தன. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 144 தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியும், 70 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் காங்கிரசுக்கு 70 தொகுதிகள் கொடுக்கப்படவில்லை. காங்கிரஸ் கடந்த தேர்தலில் வெறும் 24 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில் பிரதான ராஷ்டிரிய ஜனதாதள கட்சி, காங்கிரசுக்கு 70 தொகுதிகள் கொடுக்க மறுத்தது. ஆனால் தேஜஸ்வியை மிரட்டியே காங்கிரஸ் 70 தொகுதிகளை பெற்றது.

70 தொகுதிகளை பெற்ற காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியை நோக்கி நகர எந்த விதமான உழைப்பையும் கொடுக்கவில்லை.பெரிய தலைவர்கள் யாரும் பிரச்சாரத்திற்கு வரவல்லை. “காங்கிரஸ் முழுவதும்  ராஷ்டிரிய ஜனதாதள கட்சி தேஜஸ்வியை மட்டுமே நம்பி இருந்தோம்” என்று பீகார் காங்கிரஸ் மாநிலத்தலைவர்  கூறுகிறார். காங்கிரசின் இந்த நடவடிக்கை குறித்து யாரும் பேசுவதில்லை.இன்னும் ஒரு முக்கிய விடயம் 

மகா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி 70 இடத்தில் போட்டி போட்டு 19 இடத்தில் வெற்றியும், 51 இடத்துல தோல்வியும் அடைந்துள்ளது.

தோற்ற 51 இடங்களில் பிரன்பூர் என்ற ஒரு தொகுதியில் மட்டும் தான் AIMIM கட்சி போட்டி போட்டுள்ளது. பிரன்பூர்  வாக்கு விகிதத்தை பார்த்தல் எது உண்மை என்று தெரியும் 

இந்த பிரன்பூர் தொகுதியில் பாஜக-71206 வாக்குகள் பெற்று -41.01 %சதவிகித ஓட்டுகளை பெற்று இருக்கிறது.காங்கிரஸ் [ஐஎன்சி] -65626-வாக்குகளை பெற்று 37.8 %சதவிகித ஓட்டுகளை பெற்று உள்ளது.அதே நேரத்தில் AIMIM கட்சி வெறும் -438 வாக்குகள் மட்டுமே வாங்கி -0.25 %சதவிகித ஓட்டுகளை பெற்று உள்ளது. இது எப்படி காங்கிரசுக்கு விழ வேண்டிய ஓட்டுகளை தடுத்தது? இது எப்படி B-team ஆகும்?

50 தொகுதியில் ஏன் தோற்றோம் என்ற கேள்வியை காங்கிரஸிடம் கேட்க எந்த அறிவு ஜீவியும் இல்லையா? ஆனால்  AIMIM கட்சியை பாஜக வின் ‘B டீம்’ என்கிறார்கள். 

NDA கூட்டணியிடம் போட்டியிட்ட 125 தொகுதியில்,  118 தொகுதியில் மகா கூட்டணி தோல்வி பெற்று இருக்கிறது.  ஏன் தோற்றோம்ன்னு மகா கூட்டணியிடம் யாரும் ஏன் கேள்வி கேட்கல? ஆனால் , 7 தொகுதியில உங்களால் தோற்றோம்ன்னு மட்டும் ஒவைசியிடம் கேள்வி கேக்குறது என்ன நியாயம்?

இதையெல்லாம் ஆராய்ந்தால் தான் அடுத்த வருடம் நடக்கவிருக்கும் தமிழக தேர்தலில் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்!

ஆரம்பத்தில் மகா கூட்டணிக்கு வர இருந்த AIMIM கட்சி ஒவைசி’யை காங்கிரஸ் அலட்சியம் செய்து ஒதுக்கியது. இப்போது ‘B டீம்’ என்கிறார்கள்.கடந்த ஐந்து வருடமாக மோடியின் மோசமான கொள்கைகளை மக்களிடம் காங்கிரஸ் எடுத்து செல்லவில்லை என்பது அவர்கள் கடந்த தேர்தலில் வாங்கிய இடத்தை விட இந்த தேர்தலில் குறைவான இடத்தை  வாங்கியதிலிருந்து தெரிகிறது.ஆனால் புதிய கட்சியாக வந்து ,மக்களிடம் மோடியின் மோசமான கொள்கைகளை கூறி  ஐந்து இடங்களை பெற்று இருக்கும் AIMIM கட்சி ஒவைசி’யை  ‘B டீம்’ என்கிறார்கள் இவர்கள்.

பீகாரில் CAA விற்கு எதிராக கடுமையான பிரச்சாரம் பண்ணிய கட்சி AIMIM கட்சி இன்னும் குறிப்பாக  ‘சீமாஞ்சலின்’தொகுதி பார்டர் தொகுதி அதிக இஸ்லாமியர் உள்ள தொகுதி இங்கு எந்த கட்சியும் ‘CAA ‘விற்கு எதிரான போராட்டத்தை நடத்தவில்லை AIMIM கட்சியை தவிர. பிறகு, மக்கள் ஒவைசியை நம்பாமல் காங்கிரசை எப்படி நம்புவார்கள்? ஏன் அறிவிஜீவிகள் இதை கேள்வியாக கூட கேட்பதில்லை?

சரி, அடுத்த விவாதத்திற்கு  வருவோம். AIMIM -ஒவைசி கட்சி போட்டியிட்ட மொத்த தொகுதி 22 தொகுதிகள். AIMIM கட்சி  5 தொகுதிகளில்தான்  வெற்றி பெற்றது.மற்ற தொகுதிகளில் யார் அதிக வெற்றியை  பெற்றார்கள் ? மகா கூட்டணிதானே அதிகமாக பத்து தொகுதியை பெற்று இருக்கிறது

இந்த தேர்தலில் இன்னும் ஒரு கட்சி போட்டியிட்டதை வசதியாக அறிவுஜிவிகள்  மறந்து விட்டார்கள்  வெற்றி ஏதும் பெறாததால் யாரும் பேசாமல் இருக்கிறார்கள் போலும் .

சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சி மற்றும் பப்பு யாதவின் ஜன ஆதிகர் கட்சி உடன் சில கட்சிகளும் சேர்ந்து இந்த தேர்தலை எதிர்கொண்டன 154 தொகுதிகளில் இந்த கூட்டணி களமிறங்கியது.ஆனால், எதிலும் வெற்றி பெறவில்லை.கடுமையாக பிரச்சாரம் செய்தார்கள் ,ஊர்வலங்கள் நடத்தினார்கள், பணத்தை தண்ணியாக செலவழித்தார்கள். அவர்களிடம் பெரும் பணம் இருந்தது.   தலைவர்கள் ஹெலிகாப்டர்களில் சுற்றி வந்தனர். அவர்களுடைய நிதியின் ஆதாரம் என்ன? யாரும் கேள்வி கேட்க வில்லை?

அவர்கள் எல்லா இடங்களிலும் வாக்குகளை பிரிக்கதான் முயற்சித்தார்கள். முக்கியமாக, தேஜஸ்வி யாதவை குறிவைத்து செயல்பட்டார்கள். யாதவ், தலித், முஸ்லிம் வாக்குகளில் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். இன்னும் யாரும் அவர்களை யாருடைய B டீம் என்று அழைக்கவில்லை. அனைவரும் வசதியாக அவர்களை மறந்துவிட்டனர்.

தமிழக தேர்தல் விமர்ச்சன அறிவி ஜீவிகளுக்கு பீகார் தேர்தல் மிக நுட்பமான பாடத்தை தந்திருக்கிறது கற்று கொள்ள நாம் தயாராக இல்லை எனில் பீகார் போல தமிழகமும் நாளை பாஜக வசம் போய்விடும் அல்லது மாநில கட்சிகளை சிதைத்து விடும் நிதிஷ்குமார் கட்சியை போல! தமிழகத்தில் காங்கிரஸ்  விட அதிக மக்கள் செல்வாக்கு நிறைந்த கட்சிகள் வைகோ வின் மறுமலர்ச்சி திமுக வும் ,திருமாவின் விடுதலை சிறுத்தை கட்சியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதுபோல,இஸ்லாமிய கட்சிகள் தொடர்ந்து மக்களிடம் வேலை செய்து கொண்டிருக்கிறது. இவைகளை தவிர்த்து கூட்டணி அமைவது பீகார் போல பாஜக வுக்கு சாதகமாக போய்விடும் எச்சரிக்கை!

சேவற்கொடியோன்    

.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top