கருத்து சுதந்திரம் பறிப்பு;மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் ஓடிடி தளங்கள்!

ஆன்லைன் மூலமாக வெளியாகக் கூடிய அனைத்து தகவல்கள், படங்கள், சீரியல்கள் அடங்கிய ஓடிடி தளங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ரசிகர்கள் தியேட்டரில் படங்கள் பார்ப்பது மாறி, தற்போது ஓடிடி தளங்களில் படம் பார்க்க துவங்கிவிட்டனர். அதிலும், இந்த கொரோனா காலத்தில் கிட்டத்தட்ட 7 மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் தயாரிப்பாளர்கள், தங்கள் திரைப்படங்களை வேறு வழியில்லாமல் ஓடிடி தளங்களில் வெளியிடுகின்றனர். வெப் சீரியல்களும் அதிகளவு வரத்தொடங்கியுள்ளதால் ஓடிடி தளங்களில் ரசிகர்கள் அதிகளவு மூழ்கியுள்ளனர்.

அதேசமயம் ஓடிடி தளங்கள், ஆன்லைன் தளங்களில் வெளியாகும் இணைய தொடர்கள், திரைப்படங்களுக்கு சென்சார் கிடையாது என்பதால் ஆபாச காட்சிகள், அவதூறு காட்சிகள், கெட்ட வார்த்தைகள் அதிகம் இடம்பெறுவதாக பலர் புகார் அளித்து வந்தனர்.

இதற்கிடையே ஆபாசமான பதிவுகளை ஒளிப்பரப்பியதாக பிரபல ஓடிடி தளமான ஆல்ட் பாலாஜி (ALT Balaji) உட்பட 7 ஆன்லைன் ஓடிடி தளங்கள் மற்றும் இரண்டு இணையதளங்கள் மீது மகாராஷ்டிர சைபர் கிரைம் பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது. விரைவில் இந்த தளங்களின் நிர்வாகத்திற்கு சம்மன் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆன்லைன் மூலமாக வெளியாக கூடிய அனைத்து தகவல்கள், படங்கள், சீரியல்கள் உள்ளிட்டவற்றை மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையின் கட்டுப்பாட்டிற்குள் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.இதன் மூலம் மக்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது

அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள், அவற்றில் வெளியாகும் படங்கள், சீரியல்கள், யூடியூப் சேனல்கள் மற்றும் ஆன்லைன் செய்தி தளங்கள் ஆகிய அனைத்தும் தகவல் ஒளிபரப்பு துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் இனி இணைய தொடர்கள் சென்சார் செய்யப்படவோ, அதன் கருத்துருவாக்கம் தவறாக இருக்கும் பட்சத்தில் நீக்கவோ அரசு நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

அனைத்து ஊடகங்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது இனி ஓடிடி தளங்களிலும் பாஜக அரசியல் சார்ந்த கருத்து மற்றுமே அனுமதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top