பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா? மோடிக்கு உத்தவ் தாக்கரே கடும் கண்டனம்!

பீகார் தேர்தல் அறிக்கையில் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என பாஜக  கூறியதற்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.

பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் அறிக்கையில் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பா.ஜனதா தெரிவித்திருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனமும், விமர்சனமும் செய்து வருகின்றன.

இந்நிலையில் சிவசேனா கட்சியின் வருடாந்திர தசரா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட உத்தவ் தாக்கரே ‘‘நீங்கள் பீகாரில் இலவசமாக கொரோனா தடுப்பூசி கொடுப்பது குறித்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அப்படி என்றால் நாட்டின் மற்ற பகுதிகள் பாகிஸ்தானா? அல்லது வங்காளதேசமா?. இதுபோன்று பேசியதற்கு அவர்களாகவே அவமானப்பட வேண்டும். நீங்கள் மத்திய அரசாக இருக்கிறீர்கள்.

நான் முதலமைச்சராக பதவி ஏற்றக் காலத்தில் இருந்து, ஆட்சி கவிழ்ந்து விடும் என்கிறார்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால், அதை செய்து காண்பியுங்கள் என்பதை சவாலாக சொல்கிறேன்’’ என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top