தமிழகத்தில் இன்று புதிதாக 2,869 பேருக்குக் கொரோனா தொற்று; சென்னையில் 764 பேர் பாதிப்பு

தமிழகத்தில் இன்று 2,869 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 764 பேர் பாதிப்பு. மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 7,09,005 .

தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

சமீபகாலமாக வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வருபவர்களில்  ஒருவருக்கும் தொற்று இருந்ததில்லை. இன்றும் யாருக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.

சென்னையில் 764 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 2,105 பேருக்குத் தொற்று உள்ளது.

* தற்போது 66 அரசு ஆய்வகங்கள், 133 தனியார் ஆய்வகங்கள் என 199 ஆய்வகங்கள் உள்ளன.

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 30,606.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 95,17,507.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 80,690.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 7,09,005.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 2,869.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 764.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 4,27,960 பேர். பெண்கள் 2,81,013 பேர். மூன்றாம் பாலினத்தவர் 32 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 1,720 பேர். பெண்கள் 1,149 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 4,019 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 6,67,475 பேர் .

* இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 14 பேர் தனியார் மருத்துவமனையிலும், 17 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 10,924 ஆக உள்ளது. இதுவரை சென்னையில் மொத்தம் 3,592 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top