ஐந்து கொரோனா தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கிறது;நிர்வாக அதிகாரி

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா 5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை உற்பத்தி பண்ண தயாராகி இருக்கிறோம் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறுகிறார்.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) 2021-22 ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலகளவில் கோவிஷீல்ட், கோவோவாக்ஸ், கோவிவாக்ஸ், கோவி-விஏசி மற்றும் எஸ்ஐஐ கோவாக்ஸ் ஆகிய ஐந்து வெவ்வேறு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் 100 கோடி டோஸ் அளவுகளை தயார் செய்யும் என அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறினார்.

‘கோவிஷீல்ட்’ கொரோனா வைரஸ் தடுப்பூசியுடன் 2021 ஆம் ஆண்டில் ஒவ்வொரு காலாண்டிலும் குறைந்தது ஒரு தடுப்பூசியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. கோவிஷீல்ட், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது மற்றும் ஆங்கிலோ ஸ்வீடிஷ் மருந்து தயாரிப்பாளரான அஸ்ட்ரா ஜெனெகாவிடமிருந்து உரிமம் பெற்றது, தற்போது இந்தியாவில்1,600 பேர் கொண்ட 3 ஆம் கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. உட்பட்டுள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (Serum Institute Life Sciences) இன் இரண்டாவது கொரோனா வைரஸ் தடுப்பூசி, ‘கோவோவாக்ஸ்’ ஆக இருக்கக்கூடும், இது பயோடெக் நிறுவனமான நோவோவாக்ஸுடன் இணைந்து உருவாக்கப்படும் ஸ்பைக் புரத தடுப்பூசி ஆகும்

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா  கூறியதாவது:-

2021-22 ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலகளவில் கோவிஷீல்ட், கோவோவாக்ஸ், கோவிவாக்ஸ், கோவி-விஏசி மற்றும் எஸ்ஐஐ கோவாக்ஸ் ஆகிய ஐந்து வெவ்வேறு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் 100 கோடி டோஸ் அளவுகளை தயார் செய்யும்

“நாங்கள் ஏற்கனவே 20-30 மில்லியன் அளவுகளை உருவாக்கி வருகிறோம், உற்பத்தியை ஒரு மாதத்திற்கு 70-80 மில்லியனாக உயர்த்த முடியும். தற்போது, தடுப்பூசியின் அடுக்கு ஆயுளைக் கருத்தில் கொண்டு நாங்கள் குறைந்த அளவு உற்பத்தி செய்கிறோம் என கூறினார்.

இதில் கவனிக்கவேண்டிய ஒரு விஷயம்; ‘கோவிஷீல்ட்’ என்கிற தடுப்பூசியை  இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ளது.இரண்டு தினங்களுக்கு முன்  ‘கோவிஷீல்ட்’ கொடுத்து பரிசோதனை செய்த இளைஞர்கள் திடீரென இறந்து போன தகவல் வெளிவந்தது.அந்த தடுப்பூசியையும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்தான்  (Serum Institute Life Sciences)  உற்பத்தி செய்ய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top