தமிழகத்தில் புதிதாக 3,077 பேருக்கு கொரோனா; இன்று மட்டும் 45 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று 3,077 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 7,00,193 . சென்னையில் மட்டும் மொத்தம் 1,93,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், 

* தமிழகத்தில் மேலும் 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,00,193 -ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,55,170 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 4,314 பேர் குணமடைந்துள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 10,825 ஆக உயர்ந்துள்ளது. இதில் 20 பேர் தனியார் மருத்துவமனையிலும், 25 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் இன்று 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 10,780 ஆக உள்ளது. இதுவரை சென்னையில் மொத்தம் 3,569 பேர் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 833 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,93,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 92,75,108 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 81,259 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 197 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 34,198 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,22,711 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 1,829 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,77,450 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 1,248 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 32 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை.

* வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,711 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

*  நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 43 பேரும் எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்” என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top