விஜய்சேதுபதி மற்றும் முக்கிய பிரபலங்களின் மகள்களுக்கு பாலியல் மிரட்டல்! என்ன செய்கிறது போலீஸ்?

விஜய் சேதுபதி மற்றும் முக்கிய பிரபலங்களின் மகள்களுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்படுவது தொடர்கிறது.இது குறித்து  குற்றப்பிரிவு போலீசார் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள்?

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்தனர். இதில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

முத்தையா முரளிதரன் 2009 தமிழீழ இனப்படுகொலையின் போது “எனக்கு மகிழ்ச்சியான நாட்கள் இவைகள்” என்று கூறியிருந்ததால் மனித உரிமை செயல்பாட்டாளர்கள்,தமிழ் தேசியப் பற்றாளர்கள் , அரசியல் கட்சி மற்றும் அரசியல் இயக்கத்தினர்கள் விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலக வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர் இதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். எதிர்ப்புகள் அதிகரித்ததால் இப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய் சேதுபதி நேற்று அறிவித்தார்.

இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு நெட்டிசன் ஒருவர் rithik என்பவர் அஜித் ரசிகர் என்ற போர்வையில் சமூக வலைதளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த rithik என்பவர் தான் இதற்குமுன் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மகளுக்கும், கிரிக்கெட் வீரர் தோணி மகளுக்கும் பாலியல் மிரட்டல் விடுத்திருந்தார்.இது குறித்து திருமுருகன் காந்தி ட்விட் செய்து தமிழக காவல்துறை தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.ஆனால் , எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரிய வில்லை  தமிழக காவல்துறையின் அலச்சியத்தினால் இப்போது விஜய் சேதுபதி மகளுக்கும் மிரட்டல் தொடர்கிறது  

இந்நிலையில் கனிமொழி, பிரேமலதா விஜயகாந்த், குஷ்பு, மற்றும் சில அரசியல் கட்சித் தலைவர்கள்  உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்ததால்  சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசியவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வருகிறது.  சென்னை மாநகர காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

“இது போன்று பிரபலங்களின் மகள்களுக்கு தன்னுடைய அடையாளத்தை மறைத்துக்கொண்டு மிரட்டல் விடுவது தீவிர இந்துத்துவ  கும்பலுக்கு மட்டுமே உண்டு, அஜித் ரசிகர்கள் என்னும் அடையாளத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு சாதிவெறியை சாதிப்பெருமையை பேசுவதும், பெண்கள் மீது குழந்தைகள் மீது பாலியல் வன்மத்தை காட்டுவதும் என வடஇந்திய சங்கீகளின் அதே எண்ண ஓட்டம் கொண்ட நபர்கள் தமிழ்நாட்டில் உருவாவது ஆபத்தானது”. என்று சமூகவலைத்தளத்தில் விவாதித்து வருகிறார்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top