தென்னிந்திய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை மையம் அறிவிப்பு

மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால் தென்னிந்திய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் அறிவிப்பு

மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், இதன்மூலம் தென்னிந்திய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உருவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக சென்னையில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும் திருவள்ளூர், தர்மபுரி, சேலம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, மத்திய வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top