அரசு சும்மா வேடிக்கை பார்க்காது! துணைவேந்தர் சூரப்பாவுக்கு கல்வியமைச்சர் எச்சரிக்கை!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறி உள்ளார்.

அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து தொடர்பாக பல்கலை துணைவேந்தர் சூரப்பா தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.இதை எதிர்கட்சிகள் கண்டித்து அறிக்கைகள் வெளிவந்தன. இந்நிலையில் பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் 69 % இடஒதுக்கீடு கேள்விக்குறியாகும். சிறப்பு அந்தஸ்து பெற்றால் கல்வி கட்டணம் அதிகரிக்கும். என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனே கூறியதும் பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும், கல்வியமைச்சர் சிறப்பு அந்தஸ்தால் என்ன கிடைக்குமோ அதை மாநில அரசாலேயே செய்ய முடியும்.  சிறப்பு அந்தஸ்து பெற்றால் கல்விக்கட்டணம் அதிகரித்து மாணவர்கள் பாதிக்கப்படுவர். என்றார்.

இன்று ,தர்மபுரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:


* அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது.

* துணைவேந்தர் என்பவர் 3 ஆண்டுகால பணிக்காலத்தில் சுதந்திரமாக செயல்படலாம். அதற்கு தடையில்லை.

* துணைவேந்தர் என்பவர் விதிகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும்.என்று அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top