இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67708 பேர் பாதிப்பு; மொத்தம் கொரோனா தொற்று 73 லட்சத்தைக் கடந்தது!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67 ஆயிரத்து 708 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 73 லட்சத்து 7 ஆயிரத்து 97 ஆக அதிகரித்துள்ளது.

இதில் நம்பிக்கை அளிக்கும் வகையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63 லட்சத்து ஆயிரத்து 83 ஆயிரத்து 441 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 87.35 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 லட்சத்து 12 ஆயிரத்து 390 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11.11 சதவீதமாகக் குறைந்துள்ளது.

தொடர்ந்து 7-வது நாளாக கொரோனா வைரஸால் சிகிச்சை பெற்றுவோர் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 680 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 226 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் உயிரிழப்பு 1.52 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 9 கோடியே 12 லட்சத்து 26 ஆயிரத்து 306 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 11 லட்சத்து 36 ஆயிரத்து 183மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை எட்டிய நிலையில், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும், 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும் எட்டியது. அக்டோபர் 10-ம் தேதி 70 லட்சத்தையும் எட்டியது குறிப்பிடத்தக்கது.என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top