கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அ.ம.மு.க. பொருளாளர் வெற்றிவேல் கவலைக்கிடம்!

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அ.ம.மு.க. பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனையிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.

அ.ம.மு.க. கட்சியின் பொருளாளராக வெற்றிவேல் இருந்து வருகிறார். கட்சி பணியில் தீவிரமாக இருந்த அவருக்கு, கடந்த 6-ந்தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

அ.ம.மு.க. நிர்வாகி வெற்றிவேலுக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவருக்கு தற்போது செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் வெற்றிவேலின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top