மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரியை கட்ட முடியாது! ரஜினிகாந்த் உயர்நீதிமன்றத்தில் மனு

ரஜினிகாந்த்தின்  ராகவேந்திரா திருமண மண்படத்திற்கு சென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரி கட்டமுடியாதென  ரஜினிகாந்த் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 6 மாத காலமாக தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து ,பொழுதுபோக்கு இடங்கள், திருமண மண்டபங்கள் மூடப்பட்டு கிடந்தன. தற்போது தான் தளர்வுகள் அடிப்படையில் திருமண மண்டபங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக ஓடாத ஆம்னி பஸ்களுக்கு தமிழக அரசு ரோடு வரி போட்டது. ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக ஓடாத பஸ்களுக்கு ரோடு வரியை நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழக அரசும் அசைந்து கொடுக்காமல் போராட்டம் நீடித்து வருகிறது.இதனால் மக்கள்தான் அவதி படுகிறார்கள்.இதை போன்று திருமணமண்டபங்களுக்கும் 6 மாத காலத்திற்கு சொத்து வரியை கட்டச்சொல்லி சென்னை மாநகராட்சி ஆணை பிறப்பித்து இருக்கிறது

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ரூ.6.50 லட்சம் சொத்து வரி செலுத்த சென்னை மாநகராட்சி கோரியுள்ளது. ஆனால் ஏப்ரல்-செப்டம்பர் காலத்தில் மத்திய, மாநில அரசுகள் விதித்த பொதுமுடக்கத்தால் மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாக இருந்ததால் சொத்து வரியை கட்டமுடியாது என்று அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரஜினிகாந்தின் அரசியல் செல்வாக்கினால் தமிழக அரசு சொத்து வரியை கட்டாமல் இருக்க சலுகை வழங்கினால் ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கும் வரி சலுகை கொடுக்க வேண்டியதிருக்கும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top