அதிபர் டிரம்ப் ரஷ்ய தடுப்பூசியை பயன்படுத்தியதாக வைரலாகும் தகவல்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனாவிற்கு ரஷ்யாவின் தடுப்பூசி மருந்தை பயன்படுத்தியதாக கூறும் தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினியா டிரம்ப்பிற்கு அக்டோபர் 2 ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின் இருவருக்கும் அந்நாட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் தனக்கு ஏற்பட்ட தொற்றை சரிசெய்ய ரஷ்ய தடுப்பு மருந்தை பயன்படுத்தியதாக அவரே பதிவிட்ட ட்விட் ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் ஸ்கிரீன்ஷாட்டில், இன்று காலை நான் ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டேன். இதை உங்களிடம் தெரிவிக்க விரும்பினேன். இது மிகவும் பாதுகாப்பானது. இதில் எந்த பக்க விளைவுகளும் இல்லை என எழுதப்பட்டு உள்ளது.

உண்மையில் டிரம்ப் ரஷ்ய தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டாரா என ஆய்வு செய்ததில், வைரலாகும் ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட் போலி என தெரியவந்துள்ளது. அதிபரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவுகளில் வைரல் பதிவு போன்று எந்த தகவலும் இடம்பெறவில்லை.

அந்த வகையில் டொனால்டு டிரம்ப் ரஷ்ய தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டதாக வைரலாகும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என தெரிய வருகிறது .


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top