பல நாடுகளில் பரவியிருந்த கொரோனா வைரஸ்ஸை நாங்கள்தான் முதலில் கண்டறிந்தோம் -சீனா விளக்கம்

பல நாடுகளில் பரவி இருந்த கொரோனா வைரசை முதலில் கண்டறிந்த உலகநாடுகளுக்கு அறிவித்ததே சீனாதான் என அந்த நாடு கொரோனா வைரஸ் பரவல் குறித்து விளக்கம் அளித்து உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் மனிதர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கொடிய வைரஸ் எங்கிருந்து வெளிப்பட்டது என்பது குறித்து பல அனுமானங்கள், யூகமான செய்திகள் உலா வருகின்றன. அதேசமயம், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் முதன்முதலில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டனர்.

கொரோனாவை பரப்பியது சீனா தான் என அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. அமெரிக்க அதிபரின் தடாலடி அரசியலாக அது இருந்தாலும் அமெரிக்காவுக்கு ஆதரவான இந்தியா போன்ற நாடுகளும் அதை நம்ப ஆரம்பித்து விட்டது. ஆனால அதனை சீனா மறுத்து வருகிறது. 

இந்த நிலையில் சீனா கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்ட நாடு அல்ல என்று சீனா கூறி உள்ளது. கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி இருந்ததாகவும், அதைக் கண்டறிந்த முதல் நாடு சீனா என்றும் புதிய விளக்கம் அளித்து உள்ளது.

சீனாவின் உகான் நகரில் உள்ள இறைச்சி சந்தையில் வவ்வால்கள் அல்லது எறும்பு திண்ணி மூலம் வைரஸ் பரவுகிறது என்று கூறும் அனைத்து அறிக்கைகளையும் சீனா மறுத்து உள்ளது. தொற்றுநோய்க்கு சீனாவை குற்றம் சாட்டிய அமெரிக்கா கூறிய அனைத்து உரிமை கோரல்களையும் சீனா மறுத்து உள்ளது.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் கூறுகையில்,  கொரோனா வைரஸ் புதிய வகை வைரஸ் என்றும் அது தொடர்பான பல உண்மைகள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் கூறினார்.

கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை சீனா மறைத்து வைத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ குற்றம் சாட்டிய நிலையில், அவரது கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக சீனாவின் அறிக்கை வந்து உள்ளது. 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top