2020-ம் ஆண்டு இலக்கிய துறைக்கான நோபல் பரிசு கவிஞர் லூயிஸ் க்ளூக்கிற்கு அறிவிப்பு!

உலகின் அனைவராலும் பாராட்டப்படுகிற உயரிய விருதான 2020-ம் ஆண்டு இலக்கிய துறைக்கான நோபல் பரிசு அமெரிக்க பெண் கவிஞர் லூயிஸ் க்ளூக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக உயரிய விருதுகளுள் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசு கடந்த சில தினங்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் போட்டி பட்டியலில் உள்ளனர்.

இந்நிலையில், 2020-ம் ஆண்டு இலக்கிய துறைக்கான நோபல் பரிசு பெறுபவர் பெயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, அமெரிக்காவை சேர்ந்த பெண் கவிஞர் லூயிஸ் க்ளூக்கிற்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் புகழ்பெற்ற இலக்கிய பாராட்டுக்கான பல ஆண்டுகால ஊழல்கள் மற்றும் சர்ச்சைகளுக்குப் பிறகு இலக்கியத்திற்கான நோபல் பரிசு இன்று லூயிஸ் க்ளூக்கிற்கு வழங்கப்பட்டது.

இலக்கிய பரிசு பெற்ற லூயிஸ் க்ளூக் 1968 ஆம் ஆண்டில் ‘முதல் குழந்தை’ மூலம் அறிமுகமானார், விரைவில் அமெரிக்க சமகால இலக்கியத்தில் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவராக பாராட்டப்பட்டார். அவர் பன்னிரண்டு கவிதைத் தொகுப்புகளையும், கவிதைகள் குறித்த சில கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

நோபல் பரிசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கவிஞர் குறித்த பதிவில்: “2020 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க கவிஞர் லூயிஸ் க்ளூக்கிற்கு வழங்கப்படுகிறது” “எளிய அழகுடன் கூடிய தனிப்பட்ட இருப்பை உலகளாவியதாக ஆக்குகின்ற அவரது தெளிவான கவிதை குரலுக்கு.” என்று பதிவிட்டுருக்கிறார்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top