தனது கனவு பலிக்காது போனாலும் முதல்வர் வேட்பாளரை அறிவித்த ஓ.பன்னீர் செல்வம்!

தனது கனவு பலிக்காது போனாலும் மகிச்சியுடன் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்துள்ளார்  

மகிழ்ச்சியுடன் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளேன், என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சொல்லும் போதே அவருடைய கனவு பலிக்காது போன துக்கம் அவர் முகத்தில் தெரிந்தது

தமிழக மக்கள் கொரோனா பயத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கையில்.ஆறு மாதத்திற்கு பிறகு இப்போதுதான் வேலைக்கு திரும்பி, ஒருவேளை சாப்பாட்டிற்கு உத்திரவாதம் பண்ணியிருக்கிறார்கள்

இந்நிலையில், தமிழக மக்களைப்பற்றி எந்தவிதமான கவலையும் கொள்ளாமல், தமிழக பொருளாதார மீட்பு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மத்திய அரசின் ஹிந்தி திணிப்பிற்கு அனுமதி அளித்தும், எதிர்கால தமிழகம் குறித்து கவலை கொள்ளாமல் அடுத்து வரும் தேர்தலில் யார் முதல்வர் என்கிற போட்டியில் ஈடுபட்டது அதிமுக அரசு.

அதிமுகவில் வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளாராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக உட்கட்சி பூசல் தீவிரமாகி கட்சி உடையும் நிலைக்கு போனதால் அக்கட்சி மூத்த தலைவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும்  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும்  சந்தித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தனர்

கடந்த சில தினங்களாக தமிழக அரசு மக்களைப் பற்றி கவலை கொள்ளாமல் அவர்களது கட்சி பிரச்சனையை தலையாய தமிழக பிரச்சனையாக மாற்றி விட்டிருந்தனர்.மீடியாக்கள் ,பத்திரிகைகள் எல்லாம் இவர்களை பற்றியே பேச வைத்தனர். சந்தடி சாக்கில் மத்திய பாஜக அரசு ஹிந்தி திணிப்பை தமிழகத்தில் நிறைவேற்ற இந்த காலகட்டத்தில் நன்றாக பயன்படுத்திக்கொண்டது

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகள், மூத்த அமைச்சர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.  குறிப்பாக நேற்று காலை முதல் அதிகாலை வரை மூத்த அமைச்சர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரையும்  மாறி மாறி சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினர். இதனால், ஆளும் அதிமுகவில் உச்ச கட்ட பரபரப்பு நிலவியது. 

இதற்கிடையில் மத்தியில் ஆளும் பாஜக தன் பங்குக்கு நாட்டாமை செய்தது. ஓ.பன்னீர் செல்வம் வைத்த பிரதான கோரிக்கையான வழிகாட்டுதல் குழுவை அமைக்கவும் அதில் ஓபிஎஸ் ஆட்கள் பிரதிநிதியாக சேர்க்கவும் எடப்பாடியை நிர்பந்தித்தது பாஜக. வழிகாட்டுதல் குழு அமைக்க ஒப்புதல் அளித்தால் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்படுவார் என்கிற டீல் சரி செய்யப்பட்டு ஒரு வழியாக இருவரும் சமரசம் ஆனார்கள்.

இதில் கவனிக்கவேண்டிய விஷயம். மத்திய பாஜக அரசுக்கு வந்த உளவுத்துறை அறிக்கையின் படி வருகிற தேர்தலில் அதிமுக வெற்றி என்பது கேள்விக்குறியாக இருக்கிற படியால்  ஓபிஎஸ் வசம் இதை எடுத்து கூறி அடுத்து வருகிற ஆட்சியை விட கட்சியை கைப்பற்றுங்கள் அதுதான் புத்திசாலித்தனம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அதுபோல முதல்வர் வேட்பாளர் எடப்பாடியிடம் ஜனவரியில் வெளிவருகிற சசிகலா கட்சியை மீட்க திட்டமிடுவார் அதை தடுப்பதற்கு வழிகாட்டுதல் குழு அவசியம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. கடைசியில் இருவரும் சமாதானம் ஆனாலும், ஓபிஎஸ் க்கு தனது கனவு பலிக்காமல் போனது பெரிய வருத்தமாக இருக்கிறது   

செயற்குழு கூட்டத்திற்கு பிறகு பேட்டி அளித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி அக்டோபர் 7  (இன்று ) அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கூறினார்.

இந்த நிலையில், அதிமுக முதல்வர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,   துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பா பழனிசாமி இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்

அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் எனவும், முதல்வர் வேட்பாளரை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவிப்பார் எனவும் தெரிவித்தார்.

மேலும், அவைத்தலைவர் மதுசூதனனுக்கு உடல்நலம் சரியில்லாததால் வரவில்லை எனவும், அவர் சம்மதத்துடனேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார்.

தொடர்ந்து அதிமுக சார்பில் வரும் 2021- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவார் என ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கவலையான உள்ளத்தோடு அறிவித்தார். 

“மகிழ்ச்சியுடன் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளேன்” என்று அவர் சொல்லும்போதே அவரது கவலை தெரிந்தது

ஓ.பன்னீர் செல்வம் பேசும் போது  அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் குழப்பம் ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியுடன் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளேன், எதிர்க்கட்சிகளின் கனவு பலிக்காது  என்று தெரிவித்தார்.{ அவர் யாரை எதிர்க்கட்சி என்று சொன்னார் என்று அங்கிருந்த பத்திரிக்கையாளர்களுக்கு விளங்கியது ]

1991ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தற்போதுதான், அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேவற்கொடியோன்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top