பீகார் தேர்தல்; ஐக்கிய ஜனதா தளம்- பாஜக தொகுதி உடன்பாடு; நிதிஷ் குமார் அதிருப்தி!

பீகார் மாநிலத் தேர்தலில்  மெகா கூட்டணி ராஷ்டீரிய ஜனதா தளம் 144 இடங்களில் போட்டியிடுகிற நிலையில் நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளம் 122 தொகுதியில் போட்டியிடுவது தொண்டர்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தி இருக்கிறது  

பீகார் மாநிலத்துக்கு வருகிற 28-ந்தேதி முதல் நவம்பர் 7-ந்தேதி வரை 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவம்பர் 10-ந் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகிறது

நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணிக்கு எதிராக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

மெகா கூட்டணியில் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டது மொத்தம் உள்ள 243 இடங்களில் தேஜஸ்வி யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் 144 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 70, இந்திய கம்யூனிஸ்டு (எம்.எல்.) 19, இந்திய கம்யூனிஸ்டு 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 4 இடங்களில் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில் பீகார் மாநிலத்தை ஆட்சி செய்யும் ஐக்கிய ஜனதா தளம் – பாரதீய ஜனதா கூட்டணி இடையே தொகுதி உடன்பாடு பல போராட்டங்களுக்கு இடையே எட்டப்பட்டுள்ளது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் சம அளவில், அதாவது 50-50 என்ற விகிதத்தில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி மொத்தம் உள்ள 243 இடங்களில் 122 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ஜனதாவுக்கு 121 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதிஷ்குமார் தனக்குள்ள தொகுதிகளில் இருந்து ஜித்தன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சிக்கு 7 இடங்கள் ஒதுக்கியுள்ளது.

பாஜக மெகா கூட்டணியிலிருந்து வெளியே வந்த விஐபி கட்சிக்கு இடங்கள் வழங்கும். அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தகவலை நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி சக்தி கட்சி, பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாக போட்டியிடுகிறது.அது நிதிஷ் குமாருக்கு எதிராக போட்டியிட இருப்பதாக தகவல் வருகிறது.

நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மெகா கூட்டணி ராஷ்டீரிய ஜனதாதளத்தை விட மிகக் குறைவான தொகுதியில் போட்டியிடுவது அந்த கட்சி தொண்டர்களுக்கு அதிருப்தியாக இருக்கிறது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top