தொடர்ந்து பரவும் கொரோனா வைரஸ்; இனி கடுமையான காலம்தான் நமக்கு! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

நாம் கடுமையான காலத்தை நோக்கிச் செல்ல இருக்கிறோம். 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தொடர்ந்து பரவும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு, “கொரோனா வைரஸ் தொற்று எப்போது ஏற்பட்டது என்பதை சீனா தெளிவாகக் கூறவில்லை. தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமாகப் பரவியுள்ளது. உலக மக்கள் தொகையில் 10 பேரில் ஒருவருக்குக் கொரோனா பாதிப்பு உள்ளது. நாம் கடுமையான காலத்தை நோக்கிச் செல்ல இருக்கிறோம். இந்த வைரஸ் தொடர்ந்து பரவும்” என்று தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா விவகாரம் தொடர்பாக சீனாவை விசாரிக்க சிறப்பு அதிகாரிகளைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாட்டைவிட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்திய சேதம் மிகப்பெரியது. இதில் அமெரிக்காவில் மட்டும் 70 லட்சம் பேர் பாதி்க்கப்பட்டுள்ளனர். 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் வூஹான் சந்தையில் கொரோனா வைரஸ் உருவாகவில்லை. அது ஆய்வகங்களில் உருவானது என்று அமெரிக்க நாளேடுகள் செய்தி வெளியிட்டன. இதன் அடிப்படையில் கருத்துத் தெரிவித்த அதிபர் ட்ரம்ப்பும், சீன ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டதுதான் கொரோனா வைரஸ் என்றும், அதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் பரவல் குறித்த உண்மையான தகவல்களை உலக சுகாதார அமைப்பு மறைத்துவிட்டது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதானன் டெட்ராஸ் சீனாவுடன் கூட்டு சேர்ந்து, சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்று ட்ரம்ப் குற்றச்சாட்டு வைத்தார்.

ஆனால், கொரோனா விவகாரத்தில் வெளிப்படையாகவே நடந்து கொண்டதாக சீனா விளக்கம் அளித்தது. உலக சுகாதார அமைப்பும் ட்ரம்ப் குற்றச்சாட்டை மறுத்து இருக்கிறது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top