தமிழகத்தில் குறையாத கொரோனா! இன்று புதிதாக 5,622 பேருக்கு தொற்று: 65 பேர் பலி!

தமிழகத்தில் இன்று புதிதாக 5,622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 65 பேர் உயிரிழந்துள்ளனர்.என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 5,622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,14,507 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட  அறிக்கையில்,

 * தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 5,58,534 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,596 பேர் குணமடைந்துள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 65 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 9,718-ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 1364 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 171415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 76,13,999 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 87,311 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 189 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 46,255 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,70,963 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 3,417 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் /2,43,513 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும்  2,205 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 31 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

* இன்று அரசு மருத்துவமனையில் 41 பேர், தனியார் மருத்துவமனையில் 24 பேர் என 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9718 ஆக உயர்ந்துள்ளது.

* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;

* கர்நாடகா: 1 * மேற்கு வங்கம்: 2 * கேரளா : 2 * உத்தரபிரதேசம்: 2 * அசாம்: 1


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top