தமிழகத்தில் 6 லட்சத்தை தாண்டியது கொரோனா! இன்று மட்டும் 5,688 பேர் பாதிப்பு 66 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று 5,688 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 6,03,290. சென்னையில் மட்டும் இன்று 1,289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட  அறிக்கையில், 

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 5,47,335 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,516 பேர் குணமடைந்துள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 9,586-ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 1289 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,68,689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 74,41,697 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 87,647 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 187 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 46,369 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,64,129 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 3,400 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,39,130 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும்  2,288 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 31 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;

* கர்நாடகா: 2  * மேற்கு வங்கம்: 2 *  ஜார்கண்ட்: 1

இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 27 பேர் தனியார் மருத்துவமனையிலும், 39 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 9,586 ஆக உள்ளது. இதில் சென்னையில் மொத்தம் 3,228 பேர் உயிரிழந்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top