தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பு இன்று புதிதாக 5,659 பேருக்கு தொற்று- 67 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் புதிதாக 5,659 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 67 பேர் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்  சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. 

சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,97,602 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 67 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,520 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 5,610 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5.41,819 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 46,263 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று ஒருநாளில் 1,295 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கொரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 30) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,97,602 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

செப்.30 ந்தேதி தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,753 3,529 185 39
2 செங்கல்பட்டு 35,590 32,866 2,170 554
3 சென்னை 1,67,376 1,52,846 11,320 3,210
4 கோயம்புத்தூர் 32,068 26,605 5,027 436
5 கடலூர் 20,096 18,387 1,482 227
6 தருமபுரி 3,818 2,877 915 26
7 திண்டுக்கல் 8,844 8,269 414 161
8 ஈரோடு 6,776 5,570 1,117 89
9 கள்ளக்குறிச்சி 9,185 8,685 404 96
10 காஞ்சிபுரம் 21,969 20,765 887 317
11 கன்னியாகுமரி 12,707 11,600 885 222
12 கரூர் 3,087 2,585 462 40
13 கிருஷ்ணகிரி 4,589 3,712 814 63
14 மதுரை 16,629 15,515 725 389
15 நாகப்பட்டினம் 5,242 4,672 488 82
16 நாமக்கல் 5,489 4,351 1,066 72
17 நீலகிரி 4,173 3,252 896 25
18 பெரம்பலூர் 1,838 1,695 123 20
19 புதுகோட்டை 9,080 8,222 719 139
20 ராமநாதபுரம் 5,542 5,274 149 119
21 ராணிப்பேட்டை 13,390 12,779 455 156
22 சேலம் 19,639 16,519 2,794 326
23 சிவகங்கை 5,172 4,806 245 121
24 தென்காசி 7,322 6,768 416 138
25 தஞ்சாவூர் 11,194 9,503 1,513 178
26 தேனி 14,894 14,220 497 177
27 திருப்பத்தூர் 4,972 4,367 511 94
28 திருவள்ளூர் 32,387 30,195 1,647 545
29 திருவண்ணாமலை 15,495 14,254 1,009 232
30 திருவாரூர் 7,192 6,168 952 72
31 தூத்துக்குடி 13,450 12,741 587 122
32 திருநெல்வேலி 12,729 11,633 897 199
33 திருப்பூர் 8,180 6,452 1,591 137
34 திருச்சி 10,527 9,607 775 145
35 வேலூர் 14,792 13,702 848 242
36 விழுப்புரம் 11,701 10,624 979 98
37 விருதுநகர் 14,413 13,923 279 211
38 விமான நிலையத்தில் தனிமை 924 921 2 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 950 934 16 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 5,97,602 5,41,819 46,263 9,520


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top