தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி! ஊரடங்கு அக்.31 ஆம் தேதி வரை நீட்டிப்பு!

ஊரடங்கின் 5 ஆம் கட்ட தளர்வுகளை வெளியிட்ட மத்திய அரசு அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திரையரங்குகளை 50 சதவிகித இருக்கைகளுடன் திறக்க அனுமதி அளித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வராத நிலையிலும் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் படிப்படியாக தளர்வுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகின்றன.  அதன்படி, தற்போது அமலில் உள்ள 4 ஆம்  கட்ட ஊரடங்கு தளர்வுகள் இன்றோடு முடிவுக்கு வருகிறது. 

இதையடுத்து, ஊரடங்கின் 5 ஆம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்களை காணலாம்


  • அக்.31 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு 
  • தியேட்டர்களை அக்.15 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி -50 சதவிகித இருக்கைகளையே நிரப்ப வேண்டும்
  •  
  • நீச்சல் குளங்கள் பொழுது போக்கு பூங்காக்களை திறக்கலாம்.
  •  
  • பள்ளி, கல்லூரிகள் , பயிற்சி நிறுவனங்கள் திறப்பு குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம்
  •  
  • அக்டோபர் 15 ஆம் தேதிக்குப் பின்னர் ஊரடங்கு குறித்து மாநிலங்கள் முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top