துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜினமா முடிவு! நிர்வாகிகளுடன் ஆலோசனை

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜினமா செய்ய முடிவு செய்திருப்பதாகவும் அது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் பரவுகிறது.

ஆளும்கட்சியான அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை தீவிரமாக எழுந்துள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் (செப். 28) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்திலும் இது எதிரொலித்தது. அதிமுக முதல்வர் வேட்பாளரை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சேர்ந்து, அக். 7 அன்று அறிவிப்பார்கள் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

இந்நிலையில், ஓபிஎஸ் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் நேற்று (செப். 29) தனது ஆதரவு நிர்வாகிகளான துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி.மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது, மற்றொரு துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கமும் திடீரென அங்கு வந்தார்.

இதற்கிடையில், அமைச்சர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்ட ராமநாதபுரம் எம்எல்ஏ மணிகண்டன் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோரும் ஓபிஎஸ் வீட்டுக்கு வந்து பேசினர்.

இதன்பின், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வந்து ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் ஓபிஎஸ் உடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், இன்று செப். 30 ல் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர், ஓபிஎஸ் இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு குறித்து அவர்கள் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரது இல்லத்தின் முன் குவிந்து வருகின்றனர். ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவான முழக்கங்களை அவர்கள் எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையில் துணை முதலமைச்சரின் பெயர் பிரதான நிகழ்ச்சிகளில் மட்டுமே இடம்பெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறது

சென்னை மாநகராட்சி சார்பில் இன்று நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைப்பதற்கான அழைப்பிதழ் அச்சிடப்பட்டிருந்தது. அதில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறவில்லை.

தனியார் பங்களிப்புடன் தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தனியார் நிறுவனம் வெளியிட்ட அழைப்பிதழில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்பார் என அச்சிடப்பட்டிருந்தது. ஆனால்  அரசு சார்பில் வெளியிடப்பட்ட அழைப்பிதழில் துணை முதல்வர் பெயர் இடம்பெறவில்லை. 

இந்நிலையில் திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க விழாவில் துணை முதல்வர் பெயர் இடம்பெறவில்லை என்ற கேள்விக்கு, துணை முதலமைச்சரின் பெயர் பிரதான நிகழ்ச்சிகளில் மட்டுமே இடம்பெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார். 

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பற்றிய விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இரண்டு முக்கிய கூட்டங்களில் தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளாதது பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சென்னையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் துணை முதல்வர் ஓ.பி.எஸ் இன்று 2ம் நாளாக ஆலோசனை  நடத்தி வருகிறார். கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் மற்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுடன் ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்துகிறார்.

நேற்று முதல் அமைச்சரை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஒன்று  ஓ.பி.எஸ் உடன்  சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

இந்நிலையில், சமரச பேச்சு முடிவுறா நிலையில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ராஜினமா செய்ய முடிவு செய்திருப்பதாகவும் அது ஆட்சிக்கலைப்பு  வரை செல்லும் எனவும் தெரிகிறது.  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top