ஊரடங்கு நீட்டிப்பின் பின்னணி என்ன?அதிமுகவில் மீண்டும் ஆரம்பித்தது அதிகார குழாய் அடி சண்டை!

முதல்வர் வேட்பாளர் யார் என்ற அதிகாரப்போட்டிக்கு பின்னால் பொது ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வருகிறது.தளர்வுக்கான ஆலோசனையும் தொடர்கிறது

முதல்வர் வேட்பாளர் குறித்து செயற்குழுவின் விவாதத்திற்கு பிறகு இன்று  காலையில் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியுள்ள நிலையில் மாலையில் ஈபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.இருவரும் மாறி, மாறி ஆலோசனை நடத்தி வருகிறார்கள்

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து வருகிறார். காலையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை வைத்திலிங்கம், கே.பி. முனுசாமி உள்ளிட்ட பலர் சந்தித்தனர்.

அதிமுகவில் மீண்டும் ஆரம்பித்தது அதிகார குழாய் அடி சண்டை! முதல்வர் வேட்பாளர் யார் என்ற போட்டியில்,அதிமுக முதல்வர் வேட்பாளர் வரும் 7 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் இன்று  காலையில் ஓபிஎஸ் அமைச்சர்களோடு ஆலோசனை நடத்தினார்.அதை தொடர்ந்து இன்று மாலை ஈபிஎஸ் போட்டியாக அமைச்சர்களோடு ஆலோசனை நடத்தி வருகிறார்   

கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை எனவும், அதிமுக தான் மீண்டும் ஆட்சியமைக்கும் என ஓபிஎஸ்வுடனான ஆலோசனைக்கு பிறகு துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறினார். ஓபிஎஸ்-ஈபிஸ் இருவருக்கும் எனது ஆதரவு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சந்தித்துள்ளார். கடந்த ஆண்டு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன், ஓபிஎஸ் உடன் தீடீர் சந்திப்பில் ஈடுபட்டார். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தற்போது ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். 

அதிமுகவில் நடக்கும் இந்த அதிகாரச்சண்டையை பொது ஊரடங்கு முடிவதற்குள் நடத்தி முடித்து விடவேண்டும் என நினைத்திருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது. ஓ.பன்னீர் செல்வத்தின் கை தற்போது ஓங்கி இருக்கிறதால் ஊரடங்கை நீட்டிப்பு செய்து விட்டார்  எடப்பாடி என்றும் ஒரு தகவல் கசிகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த பிரச்சனையை தீர்த்துவிட்டு பிறகு ஊரடங்கு தளர்வு அறிவிக்கலாம் என்று இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top