பொது முடக்கம் நீட்டிப்புக்கு மக்கள் எதிர்ப்பு! வாழ்வாதாரம் பறிபோகிறது!

தமிழகத்தில் அக்டோபர் 31-ந்தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்

மத்திய பாஜக அரசிடம் நல்ல பெயர் வாங்குவதற்கு தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதா? என சமூக வலைத்தளங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்களை மக்கள் பதிவு செய்து வருகிறார்கள்  

பிரதமர் மோடி “கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய அதிக எண்ணிக்கையில் ஆய்வக பரிசோதனை செய்தல், நோய்த் தொற்றை கட்டுப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் ஆகியவற்றில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக திகழ்கின்றது என்றும், தமிழ்நாட்டை பார்த்து பிற மாநிலங்கள் செயல்பட வேண்டும்” என்றும் அண்மையில் நடைபெற்ற காணொலிக் காட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பாராட்டு தெரிவித்து இருந்தார்.அதன் அடிப்படையில் மேலும் அவரிடம் நல்ல பெயர் வாங்க தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வண்ணம் பொது ஊரடங்கை நீட்டித்து இருக்கிறார் தமிழக முதலமைச்சர்.

பொதுமக்களின் வாழ்வாதாரம் மிகவும் கவலைப்படும் படியாக  இருக்கிறது.  பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் ஊரடங்கு தளர்வு ஏற்படும் என்று நம்பி இருந்த சிறு, சிறு வியாபாரிகள் மிகுந்த வேதனைக்குள் ஆளாகி உள்ளனர்.

வியாபார நிமித்தம் பல இடங்களுக்கு செல்ல மின்சார ரெயில் சேவை இல்லை.குழந்தைகள் நிம்மதியாக பள்ளி செல்ல பள்ளிக்கூடங்கள் இல்லை அதுவும் பெற்றோர்களின் பாதுகாப்பில் பள்ளி சென்று வர வேண்டுமாம்.  

இந்த பொது ஊரடங்கு நீட்டிப்பு கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக இல்லை எதிர் கட்சிகளின் போராட்டத்தை ஒடுக்குவதற்காகதான்.என்று தமிழக மக்கள்  கொதித்தெழுந்து வருகிறார்கள்!   


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top