சென்னை உயர்நீதிமன்றத்தின் லோகோ இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது? இந்தி திணிப்பு?

சென்னை உயர்நீதிமன்றத்தின் லோகோ இந்தி மொழியில் மாற்றப்பட்டு இருப்பதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக வைரலாகி வருகிறது.

ஒன்றிய பாஜக அரசு தமிழ் நாட்டில் இந்தியை மறைமுகமாக திணிக்க கடுமையாக எத்தனிக்கிறது.  சமீப காலங்களில் சின்ன, சின்ன விசயங்களில், ஒன்றிய அலுவலகங்களில் ஹிந்தி திணிப்பை துவங்கி உள்ளது. ஆகையால்தான் திமுக எம்பி கனிமொழிக்கு இந்தி தெரியாததால், நீங்கள் இந்தியரா என சென்னை விமான நிலைய அதிகாரி கேட்ட விவகாரம் பூதாகாரமாய் வெடித்தது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் லோகோ இந்தி மொழிக்கு மாற்றப்பட்டதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தின் குறிக்கோள் வாய்மையே வெல்லும் என இருந்தது. தற்சமயம் இது சத்யமேவ ஜெயதே என மாற்றப்பட்டுள்ளது என சமூகவலைத் தளங்களில் பரவும் தவல்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

வைரலாக பரவும்  பதிவுகளை ஆய்வு செய்ததில், சென்னை உயர்நீதிமன்றத்தின் குறிக்கோள் மாற்றப்படவே இல்லை என தெரியவந்துள்ளது. ஆனால், கூகுளில் பல இடங்களில் ஹிந்தியில் மாற்றப்பட்டது காணக்கிடைகிறது. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் எதிலும், குறிக்கோள் சத்யமேவ ஜெயதே என மாற்றப்படவில்லை என தெரியவந்துள்ளது.

“கூகுளில் ஹிந்தியிலும் தமிழிலும் ஏன் சென்னை உயர்நீதிமன்ற லோகோ காணக்கிடைகிறது இதை உடனடியாக நீக்கவேண்டும்” என  சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்

பெரும்பாலான அரசு வலைத்தளங்களில் வாய்மையே வெல்லும் என்பதே குறிக்கோளாக இருக்கிறது. அந்த வகையில், வைரல் பதிவுகளில் உள்ளது போன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் லோகோ இந்தி மொழிக்கு மாற்றப்படவில்லை என்பது தெரிகிறது.ஒரு வேளை அப்படி ஒன்றிய அரசுக்கு எண்ணம் இருந்தால் அது தேவையற்ற பிரச்சனையை கிளப்பி விடும்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top