தசரா, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு ஐந்தாம் கட்ட ஊரடங்கு பெரும் தளர்வோடு அறிவிக்கப்படும்!

தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் வரவுள்ளதால் ஐந்தாம் கட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு பெரும் தளர்வோடு அறிவிக்கப்படுவதாக தகவல் வருகிறது

 நான்கு கட்டமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு இந்த மாத இறுதியோடு முடிவுறுகிற வேளையில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதற்கான, ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வு குறித்து இன்று அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திரையரங்குகள், நீச்சல்குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், நாடக இசை- நடன அரங்குகள் போன்றவற்றை திறக்க அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் தொழில், வர்த்தகம், சுற்றுலா, கலாசாரம் தொடர்பான பல்வேறு தளர்வுகளுக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் பொருளாதார நிலை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதால். மேலும் , தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் அடுத்தமாதம் வரவுள்ளதால் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top