சென்னையில் அதிமுக செயற்குழு;முதல்வருக்கு வேண்டிய இரு அமைச்சர்கள் ரகசியமாக டெல்லி பயணம்!

ஓ.பன்னீர் செல்வம் அதிக ஆதரவாளர்களோடு பங்கேற்கும் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நடக்கும் வேளையில் முதல்வர் பழனிச்சாமி தனது இரு அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பி உள்ளது பரபரப்பானது

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று  காலை 9.45 மணியளவில் தொடங்கியது.அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் கூட்டம் தொடங்கியது

இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்துக்கு முன் அமைச்சர்கள் சிலர் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இருமொழிக் கொள்கை, நீட் தேர்வைக் கைவிட வேண்டும், ஜிஎஸ்டி தொகையை வழங்க வேண்டும், கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழ் அறிஞர்களைச் சேர்க்க வேண்டும், கச்சத்தீவு மீட்பு, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு என மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

இந்நிலையில் பரபரப்பான சூழலில் துவங்கிய அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம்

* அதிமுகவினர் ஒற்றுமையாக பணியாற்றி  மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலர்ந்திட உழைப்போம் 

* மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம்

* கலாச்சாரத்தை ஆய்வு செய்யும் மத்திய அரசின் குழுவில் தமிழர்களை நியமிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

* தாய்மொழி தமிழ், உலகத்தோடு உறவாட ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கையே அதிமுகவின் கொள்கை. தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் 

* கொரோனா கால செயல்பாட்டுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு பாராட்டு தீர்மானம் உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

* தமிழகத்தில் கொரோனா பரவலை  குறைத்திருப்பதை ஏற்றுள்ள மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்க என்பது உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

சமீபத்தில் நடந்த அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டத்தில் பல்வேறு கருத்து மோதல்கள் எழுந்தன. முதல்வர் வேட்பாளர், கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து காரசார விவாதங்கள் நடந்தன. 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு மற்றும் சசிகலா விடுதலை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் அலசப்பட்டது.

இந்நிலையில், முதல்வருக்கு வேண்டிய இரு அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் ரகசியமாக திடீரென டெல்லி சென்றுள்ளனர்

சசிகலா சிறையிலிருந்து விரைவில் விடுதலையாவார் என்றும், அதன் பிறகு அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்றும் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, அண்மையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் திடீரென தனி விமானத்தில்டெல்லி சென்றார். மேலும், இன்று சென்னையில் அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெறும் இவ்வேளையில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இருவரும் திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர். மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், பாஜக தேசியத் தலைவர் நட்டா ஆகியோரை இருவரும் சந்தித்து பேசியுள்ளதாக தெரிகிறது.

அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களோடு காய் நகர்த்துகிறார்,அதே வேளையில் எடப்பாடி பழனிச்சாமி தனக்கு  நெருக்கமான அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இருவரையும் டெல்லிக்கு அனுப்பி காய் நகர்த்துகிறார். ஆக ,அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் விடாக்கண்டன்,கொடாக்கண்டன் கதையாக போய்க் கொண்டிருக்கிறது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top