‘யெஸ்’ வங்கி கடன் மோசடி: ராணா கபூரின் ரூ.127 கோடி மதிப்பான வீடு முடக்கப்பட்டது!

லண்டன் தெற்கு ஆட்லி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ராணா கபூர் வாங்கியுள்ள ரூ.127 கோடி மதிப்பிலான வீட்டை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது

‘யெஸ்’ வங்கியில் சட்ட விரோதமாக கோடிக்கணக்கான பணம் கடன் கொடுத்து மோசடி நடந்தது தெரிய வந்தது. இந்த மோசடி தொடர்பாக வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூர் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து ராணா கபூர் உள்ளிட்ட சிலரை கைது செய்துள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் ராணா கபூருக்கு சொந்தமான ரூ.2,011 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது. இந்த வரிசையில் லண்டன் தெற்கு ஆட்லி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ராணா கபூர் வாங்கியுள்ள ரூ.127 கோடி மதிப்பிலான வீட்டை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து அதிகாரிகளுடன் இணைந்து இந்த நடவடிக்கையை அமலாக்கத்துறை மேற்கொள்ளும்.

இந்த வீட்டை விற்பதற்கான நடவடிக்கையை ராணா கபூர் மேற்கொண்டு வந்த நிலையில், அமலாக்கத்துறை அதிரடியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top