தமிழக அரசு எஸ்.பி.பி. உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யவேண்டும்;முக ஸ்டாலின் வேண்டுகோள்

பாடகர் எஸ்.பி.பி. உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டும் என மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நலம் தேறி வந்த நிலையில், நேற்று அவரது உடல்நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. இன்று மதியம் காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரது உடல் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்துவதற்கான நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள், ரசிகர்கள் கொரோனா தொற்று குறித்து அச்சப்படாமல் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நாளை அவரது உடல் செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதற்கான இன்று இரவு 9 மணியளவில் அவரது உடல் நுங்கம்பாக்கத்தில் இருந்து பண்ணை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்நிலையில் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என தி.மு.க. தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘தமிழர்களின் நெஞ்சில் நிறைந்தவராக அரை நூற்றாண்டு காலம் புகழோடு விளங்கி, பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகள் பெற்ற #SPBalasubrahmanyam அவர்களின் இறுதிப்பயணம் உலகெங்கிலும் வாழும் ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் முழு அரசு மரியாதையுடன் நடைபெற ஆவன செய்ய வேண்டும்!’’ எனத்தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top