தமிழகத்தில் இன்று 5,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; 63 பேர் உயிரிழந்துள்ளனர்

தமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 57 ஆயிரத்து 999 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறித்த இன்றைய நிலவரம் தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

“தமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 3,282 பேர். பெண்கள் 2,043 பேர்.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 57 ஆயிரத்து 999 ஆக அதிகரித்துள்ளது. இதில், ஆண்கள் 3 லட்சத்து 36 ஆயிரத்து 469 பேர். பெண்கள் 2 லட்சத்து 21 ஆயிரத்து 500 பேர். மாற்றுப் பாலினத்தவர்கள் 30 பேர்.

இதுவரை பாதிக்கப்பட்டுள்ளவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 22 ஆயிரத்து 913 பேர். 13-60 வயதுடையவர்கள்4 லட்சத்து 63 ஆயிரத்து 126 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 71 ஆயிரத்து 960 பேர்.

இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 979. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 67 லட்சத்து 25 ஆயிரத்து 37.

இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 191. இதுவரை பரிசோதிக்கப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 65 லட்சத்து 19 ஆயிரத்து 891.

இன்று தனியார் மருத்துவமனைகளில் 27 பேர், அரசு மருத்துவமனைகளில் 36 பேர் என, 63 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 9,010 ஆக அதிகரித்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 4 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 59 பேர்.

இன்று 5,363 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 2,740 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வரை 46 ஆயிரத்து 249 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு சார்பாக 66 மற்றும் தனியார் சார்பாக 111 என, 177 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

இன்று பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 980 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரத்து 594 ஆக உயர்ந்துள்ளது. இன்று 1,118 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்து 629 ஆக உயர்ந்துள்ளது. இன்று 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 3,097 ஆக உயர்ந்துள்ளது. 9,868 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்”என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top