வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாஸ்திரி பவன் முற்றுகை-பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு!

வேளாண் மசோதாக்கள் மூன்றையும் திரும்பப் பெறக்கோரி பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு. இன்று காலை சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது

கடந்த ஞாயிறு அன்று மாநிலங்களவையில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும், பாராளுமன்ற ஜனநாயக மரபையும் மீறி வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது.

இதற்கு எதிர் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.ஹரியானா, பஞ்சாப்,போன்ற மாநிலங்களில் விவசாயிகள் கடுமையாக போராடி வருகிறார்கள்.

தன்னை ஒரு விவசாயி என்று சொல்லிக்கொள்கிற தமிழக முதல்வர் விவசாயிகளுக்கு எதிரான இந்த மூன்று மசோதாக்களையும் ஆதரித்து வாக்களித்திருப்பது விவசாயிகளுக்கு செய்கிற துரோகம் என்று தமிழக விவசாயிகள் கூறிவருகிறார்கள்    

இந்நிலையில்,இன்று தமிழகத்தில் விவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் விவசாய விரோத மூன்று மசோதாக்களை மத்திய மோடி அரசு திரும்பப் பெறக்கோரி பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக இன்று 23.09.2020 புதன்கிழமை காலையில் 10 மணிக்கு இந்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம் நடந்தது  

இந்த முற்றுகை போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மத்திய சென்னை மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீது, திராவிடர் விடுதலை கழக தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் குமரன், தமிழர் விடியல் கட்சி மாவட்ட பொறுப்பாளர் தோழர் கந்தன்,போரூர் சிங்காரவேலர் பெரியார் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் செல்வம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தோழர் அப்துல் ரசாக் மற்றும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தில் விவசாய விரோத மசோதாக்களின் நகல் தீவைத்து கொளுத்தப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களும் கைது செய்யப்பட்டு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.பின்னர் மாலை விடுவிக்கப்பட்டனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top