தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறது! பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை!

தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்துப் பள்ளிக் கல்வித்துறை வரும் 28-ம் தேதி ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டுள்ளன. மத்திய அரசு அண்மையில் பொதுமுடக்கத் தளர்வுகளை அறிவித்ததை அடுத்து, 6 மாதங்களுக்குப் பிறகு கர்நாடகா, ஆந்திரா, அசாம், பஞ்சாப், நாகாலாந்து மற்றும் மேகாலாயா ஆகிய மாநிலங்களில் பள்ளிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தன்னார்வ அடிப்படையில் பள்ளிக்கு வருகின்றனர். இதற்கிடையே தமிழகத்தில் எப்போது பள்ளிகளைத் திறக்கலாம் என்பது குறித்துப் பள்ளிக் கல்வித்துறை விவாதித்து வருகிறது.

இதன் ஒருகட்டமாக செப்.28-ம் தேதி பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் தீரஜ்குமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இது தொடர்பாக அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புதிதாக மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி தொடங்குவது குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பள்ளிகளை எப்போது திறக்கலாம், பள்ளிகளைத் திறப்பதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top