டி.டி.வி.தினகரனின் அமுமுக அதிமுகவோடு இணைகிறது!

வரும் தேர்தலுக்கு முன் சசிகலா விடுதலையாகும் நிலையில் அதிமுகவோடு அமுமுகவை இணைக்க டெல்லியில் தினகரன் பாஜகவினரை சந்தித்தது தெரிய வந்திருக்கிறது.

தனி விமானத்தில் டெல்லி சென்று பாஜகவினரை சந்தித்து திரும்பிய தினகரன் சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க பெங்களூரு சென்றுள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் சுமார் 1½ மணி நேரம் பாஜகவின் முக்கிய தலைவரையும், இதன் தொடர்ச்சியாக வீடியோ கான்பிரன்சிங் மூலம் மற்றொரு தலைவரிடம் 15 நிமிடமும் டி.டி.வி. தினகரன் பேசியிருக்கிறார். அப்போது பாஜக தங்களது நிலைப்பாடு மற்றும் தேவையான உதவி குறித்தும் தினகரனிடம்  கூறியிருக்கிறார்கள்.

வரும் சட்டமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.அதாவது அமுமுக வையும் இணைத்து  இருப்பதையே விரும்புகிறது. இந்த தேர்தலில் இணைந்து செயல்படுங்கள். முதல்வர் யார் என்பது குறித்தும் மற்றும் கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் பாஜகவின்  நிலைப்பாடு குறித்தும் பேசியிருக்கிறார்கள் என்று தகவல் வருகிறது

இந்நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்த அவர் நேற்று மதியம் பெங்களூரு சென்று இருக்கிறார். மார்ச் மாதத்திற்கு பிறகு சுமார் 5 மாதகாலத்திற்கு பிறகு பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்தில் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து டெல்லியில் நடந்த சம்பங்களை விளக்க திட்ட மிட்டுள்ளதாக தெரிகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top