அதிகமாக வெளிநாடுகளுக்கு சுற்றுபயணம் சென்ற பிரதமர் மோடி ரூ.578 கோடிசெலவு செய்துள்ளார்

2015-ம் ஆண்டிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி 58 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்துக்காக ரூ.517 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் எழுத்துபூர்வமாக நேற்று பதில் அளித்தார்.

”2015-ம் ஆண்டிலிருந்து பிரதமர் மோடி 58 நாடுகளுக்குப் பயணித்துள்ளார். அவரின் இந்தப் பயணத்துக்காக ரூ.517.82 கோடி செலவிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு தலா 5 முறை பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டிருந்தார்.

சிங்கப்பூர், ஜெர்மனி, பிரான்ஸ், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குப் பலமுறை பிரதமர் மோடி பயணித்துள்ளார். பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தில் சில பயணங்கள் இரு நாட்டு அதிபர்களின் பரஸ்பர அழைப்பின் காரணமாகச் சென்றுள்ளார்.

2019-ம் ஆண்டு நவம்பர் 13-14 ஆம் தேதி கடைசியாக பிரேசில் நாட்டுக்குப் பிரதமர் மோடி மேற்கொண்டது தான் கடைசி வெளிநாட்டுப் பயணமாகும். பிரேசலில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கச் சென்றிருந்தார்.

வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளை வலுபடுத்த இந்த பயணங்களை மேற்கொண்டார்  .

பருவநிலை மாற்றம், தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கை, சைபர் பாதுகாப்பு, அணுசக்தி, சூரிய ஒளிமின்சக்தி திட்டம் போன்றவற்றில் உலக நாடுகளுடன் இந்தியா இணைந்து செயல்படுவதற்கு பிரதமர் மோடியின் பயணம் உதவியுள்ளது”.என்று முரளிதரன் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top