ஒன் ரன் ஷார்ட் தீர்ப்பு விவகாரம்; கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நடுவரிடம் முறையீடு!

கிங்ஸ் லெவன் அணிக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் நேற்று நடந்த போட்டியில் ஒன் ரன் ஷார்ட் தீர்ப்பு விவகாரத்தில் ஆட்ட நடுவர் ஸ்ரீநாத்திடம் தோற்ற பஞ்சாப் அணி மேல்முறையீடு மேற்கொண்டது.

கிங்ஸ் லெவன் அணிக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையே நேற்று நடைபெற்ற பரபரப்பான த்ரில் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் சூப்பர் ஓவரில் வென்றது.

ஆனால் ஆட்டத்தின் 19வது ஓவரில் 2 ரன்கள் ஓடியதை நடுவர் தவறாக ஒரு ரன் என்று அறிவித்தார். அதாவது பேட்ஸ்மென் சரியாக கிரீசை ரீச் செய்யவில்லை என்பது நடுவரது வாதம் இதனால் ஒன் ரன் ஷார்ட் என்று அறிவித்தார், ஆனால் கிரிஸ் ஜோர்டான் ஒழுங்காகவே ரீச் செய்தார் என்பது வீடியோவில் தெரியவந்தது, இந்த ஒரு ரன் ஷார்ட்டினால் பஞ்சாப் தோற்றது, டெல்லி வென்றது.

நடுவர் நிதின் மேனனுக்குத்தான் ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும் என்று சேவாக் கிண்டலடித்தார்.

இந்நிலையில் பஞ்சாப் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி சதீஷ் மேனன் கூறும்போது, “நாங்கள் மேட்ச் ரெஃப்ரீ ஸ்ரீநாத்திடம் முறையிட்டுள்ளோம். ஏனெனில் இது எங்களை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதைப் பாதிக்கும். மனிதத் தவறுதான் ஆனால் ஐபிஎல் போன்ற உலகத்தரம் வாய்ந்த தொடரில் இத்தகைய மனிதத் தவறுகள் நடக்கக் கூடாது.

இது எங்கள் பிளே ஆஃப் சுற்று முன்னேற்றத்தை தடுக்கும். தோல்வி தோல்விதான், ஆனால் இது நியாயமற்றது. விதிகள் மாற்றப்பட வெண்டும், மனிதப்பிழைகளால் எங்களுக்கு தொடரே அல்லவா போய்விடும். ” என்றார்.

ஆனால் ஐசிசி, ஐபிஎல் விதிகளின் படி பவுண்டரி போனதா இல்லையா, அல்லது அவுட் ஆகியிருக்க வாய்ப்பிருக்கக் கூடிய தருணங்களில்தான் 3வது நடுவரை அழைக்க முடியும், எனவே ஒன் ரன் ஷார்ட் விவகாரத்தில் 3ம் நடுவரை அழைக்க வாய்ப்பேயில்லை. நோ-பால் தவிர வேறு எதிலும் 3ம் நடுவர் தானாகவே மூக்கை நுழைக்க முடியாது.

நடந்தது என்னவெனில் மயங்க் அகர்வால் மிட் ஆனில் தட்டி விட்டு ஓடினார். மிக எளிதாக 2 ரன்களை இவரும் ஜோர்டானும் எடுத்தனர். ரீப்ளேயில் ஜோர்டான் நன்றாக கிரீசில் ரீச் செய்த பிறகே 2வது ரன்னுக்கு ஓடி வந்தார் என்பது தெரிந்தது. ஆனால் நடுவர் ஒரு ரன் கிடையாது என்றார். கடைசியில் அசம்பாவிதமாக ஜோர்டான் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் ஆனார். இதனால் சூபர் ஓவருக்கு மேட்ச் சென்றது.

இந்நிலையில் ஆட்ட நடுவர் ஸ்ரீநாத்திடம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அப்பீல் செய்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top