‘ஜிகாநெட்’ அதிவிரைவு 4ஜி நெட்வொர்க் – வோடபோன் ஐடியா ‘வீ’ அறிமுகம்!

இன்னும் 4ஜி நெட்வொர்க்கை பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு கொடுக்காமல் இழுத்தடிக்கும் மத்திய அரசு‘ஜிகாநெட்’ என்ற அதிவிரைவு நெட்வொர்க்கை வோடபோனுக்கு அனுமதித்திருக்கிறது.

அதிவிரைவு 4ஜி நெட்வொர்க்குக்காக ‘ஜிகாநெட்’ என்ற இந்தியாவின் மிக வலுவான, அதிவிரைவான நெட்வொர்க்கை வோடபோன் ஐடியா அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் அதிக நபர்கள் பயன்படுத்தும் தொலைதொடர்பு நிறுவனங்களான வோடபோன், ஐடியா ஒருங்கிணைப்பு மூலமாக உருவாகிய ‘வீ’ என்ற புதிய நிறுவனம் ‘ஜிகாநெட்’ என்ற இந்தியாவின் மிக வலுவான, அதிவிரைவான 4ஜி நெட்வொர்க் அறிமுகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பயனர்கள் அனைவரையும் எல்லாவற்றிலும் இணைப்பில் இருக்கச் செய்வதன் மூலமாக, அவர்கள் உற்சாகத்துடன் முன்னேற இந்த ‘ஜிகாநெட்’ நெட்வொர்க் உதவும்.

இதுகுறித்து வோடபோன் ஐடியா (‘வீ’) நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி விஷாந்த் வோரா கூறியதாவது:-

அழைப்புக்காக அல்லது இணைய தேடலில் மட்டுமே தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளின் பங்கிருப்பதாக சுருக்க முடியாது. அதையும் தாண்டி, அது உயிர் வாழவும், வாழ்க்கை செழிக்கவும் தேவைப்படும் ஆக்சிஜன் போல் ஆகிவிட்டது. ‘ஜிகாநெட்’ என்பது இணைப்புகளுக்கு அப்பால் டிஜிட்டல் சமுதாயத்திற்கான தளத்தை அமைக்கும் அசத்தலான முயற்சி. நிறைய திறன் மற்றும் நிறைய வீச்சுடன், இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு நீங்கள் நிறைய விஷயங்களை மேற்கொள்ளும் அளவுக்கு மிக வேகமான இணைப்பை ‘ஜிகாநெட்’ வழங்கும். வாழ்வில் முன்னேறச் செய்யும்.என்று அவர் கூறினார்.

வோடபோன் ஐடியா (‘வீ’) நிறுவனத்தின் தலைமை டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் மற்றும் பிராண்ட் அதிகாரி கவிதா நாயர் கூறுகையில், ‘வீ’யினால் இயக்கப்படும் ‘ஜிகாநெட்’ வாடிக்கையாளர்கள் செழிக்கவும், முன்னேறவும் உதவும் என்றார்.

“எல்லா அதிவிரைவு டெக்னாலஜியையும் மத்தியில் ஆளும் பாஜக அரசு முழுமையாக தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து பொதுத்துறை நிறுவனங்களை நட்டமடைய வைக்கிறது. பிறகு நட்டத்தில் இயங்கும் நிறுவனம் என்று தனியாருக்கு விற்று விடுகிறது கடந்த ஆறு வருடங்களாக இதைத்தான் வளர்ச்சி என்கிறது பாஜக அரசு” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top