வடகிழக்கு பருவமழை; முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தலைமைச் செயலாளர் ஆலோசனை!

தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து அக்டோபரில்  வடகிழக்கு பருவமழை ஆரம்பமாக உள்ளது அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்த உள்ளார்.

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு நன்றாக பெய்துள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் அதிக அளவில் மழை பெய்துள்ளது. இதனால், நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும். வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மழைக்கு முன்பே எடுக்க வேண்டும்  

அதன் அடிப்படையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அதிகமழை பெய்யும் மாவட்டங்களை கண்டறிந்து அங்கு கூடுதல் கவனம் செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top