வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய மந்திரி ஹர்சிமத் கவுர் பாதல் ராஜினாமா?

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய மந்திரி ஹர்சிமத் கவுர் பாதல் ராஜினாமா செய்யவுள்ளார் என தகவல் வெளியானது.

பாராளுமன்ற மக்களவையில் விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், மத்தியில் பாஜக கூட்டணியில் உள்ள சிரோண்மணி அகாலிதளம் கட்சியும் வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மக்களவையில் இன்று பேசிய சிரோண்மணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றார். மேலும், மத்திய மந்திரியாக உள்ள ஹர்சிமத் கவுர் பாதல் ராஜினாமா செய்வார் என தகவல் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top